மிரள வைத்த இந்திய வீராங்கனை – “பால் ஆஃப் தி செஞ்சுரி” என புகழ்ந்த வாசிம் ஜாஃபர்..!
வாசிம் ஜாஃபர் ஷிகா பாண்டே வீடியோவை பகிர்ந்து ‘பால் ஆஃப் தி செஞ்சுரி’ என பதிவிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த இலக்குக்கு பதிலடியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது.
நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே வீசிய பந்து குறித்து பலர் வியப்பில் உள்ளனர். போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி களத்தில் நின்றபோது ஷிகா பாண்டே வீசிய பந்தை ஹேலி தடுக்க முயன்றபோது பந்து திடீரென்று அதிக டேர்ன் ஆகி மிடில் ஸ்டெம்பில் பட்டது.
Have we seen the ball of the summer already?? We can’t stop watching! #AUSvIND pic.twitter.com/9pX7bf1Bew
— cricket.com.au (@cricketcomau) October 9, 2021
ஷிகா அவுட்சைட்டில் போடப்பட்ட பந்து எப்படி இவ்வளவு தூரம் டேர்னாகி ஸ்டம்பில் பட்டது வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் இந்த பந்து குறித்து தனது ட்விட் செய்துள்ளார். அதில் , அவர் இந்த வீடியோவை பகிர்ந்து ‘பால் ஆஃப் தி செஞ்சுரி’ என பதிவிட்டுள்ளார்.
Ball of the century, women’s cricket edition! Take a bow Shikha Pandey???????? #AUSvIND pic.twitter.com/WjaixlkjIp
— Wasim Jaffer (@WasimJaffer14) October 9, 2021