ஹாக்கி இந்தியாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!
ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. ஹாக்கி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியது.
ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனது வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்புவதன் மூலம் ஆபத்தை எடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. ஹாக்கி இந்தியாவின் இந்த முடிவுக்கு விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம், எந்தவொரு சங்கம் அல்லது கூட்டமைப்பு இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கத்துடனும், துறையுடன் விவாதிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு கூட்டமைப்பின் குழு போகவில்லை, நாட்டின் அணி போகிறது. அவர்கள் விளையாட்டு அமைச்சகத்துடன் பேச வேண்டும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
ஹாக்கி போன்ற விளையாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை, கிரிக்கெட்டில் பார்த்தால் இப்போது ஐபிஎல் நடக்கிறது. அடுத்த 2 நாட்களில் உலகக் கோப்பை நடைபெறஉள்ளது. அவர்கள் விளையாட முடிந்தால் ஏன் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் விளையாட முடியாது என தெரிவித்தார். இந்தியா 18 விளையாட்டு வீரர்களை மட்டுமே கொண்டிருக்கவில்லை என அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.