“சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் ஒருவரையும் கலைஞரின் கரம் விடாது” – அகம் மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்..!

Default Image

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று பராமரிப்பு உதவித்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அதன்படி இந்த நிகழ்ச்சியில்,கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ரூ. 1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.  

இந்நிலையில்,கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் ஒருவரையும் விடாது அரவணைக்கும் தலைவர் கலைஞரின் கரமாக மக்கள் தொண்டில் நமது அரசு ஈடுபட்டு வருவதன் நீட்சியாக, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடுவதைத் தொடங்கி வைத்ததில் அகம் மகிழ்ந்தேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்