“கவிஞர் பிறைசூடனின் பாடல்கள் மறையாது” -ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி..!

Default Image

கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65 வயது) உடல்நல குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இதனையடுத்து,தமிழக முதல்வர் ஸ்டாலின்,திரைத்துறையினர் மற்றும் மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து,இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்,கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்”,என்று பதிவிட்டுள்ளார்.

கவிஞர் பிறைசூடனின் படைப்பு:

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே.

1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானார். மேலும் பணக்காரன் திரைப்படத்தில் பிறைசூடன் எழுதிய நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்