#BREAKING: ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Default Image

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக  தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய கிடைக்க  அங்கு நடத்திய சோதனையில் 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

8 பேரில் ஒருவர் தான் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். 20 மணி நேரம் நடத்திய  விசாரணைக்கு பின் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் 4 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் 4 நாள் காவல் முடிந்ததும் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 21 ஆம் தேதி வரை 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஜாமின் கோரி ஆர்யன் கான் மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மறுப்புத் தெரிவித்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்