100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது – அமைச்சர் சேகர்பாபு
100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எத்தனை தடைகள் வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த அரசை, நடத்துகின்றவர் ஒரு செயல்வீரர். களத்திலே நின்று பல வெற்றிகளை குவித்துள்ளார். ஒரு களப்போராளி 50 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர். இப்படியெல்லாம் உள்ள அரசை ஸ்தம்பிக்க வைக்க 100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தான், வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது . எனவே, பாஜக மத்திய அரசை எதிர்த்து தான் போராட்ட வேண்டுமே தமிழக அரசை அல்ல என்று கூறியுள்ளார்.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வார இறுதி நாளில் வழிபாட்டு தளங்களை திறக்க கோரி, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.