ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உயர்நீதிமன்றம்
அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்.24-ல் சாத்தூர் வந்தபோது அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சாத்தூர் போலீசார் ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேர் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.