இனி கோயில் இட வாடகையை ஆன்லைனில் செலுத்தலாம் – அமைச்சர்

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு.

தமிழகத்தில் கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர், கோயில் இடத்தில் உள்ள வாடைகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என தெரிவித்தார்.

இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என்றும் இணையவழியில் வாடகை செலுத்த முடியாதவர்கள், நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டத்தை கூட்ட மத்திய அரசிடம் இருந்து பாஜக அனுமதி வாங்கி தந்தால் கோயில்களை திறக்க தயார் என்றும் வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு அவசியமில்லை, எனினும் ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்