திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வசதி மேம்படுத்த திட்டம்..!
திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம்
சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் 8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் திருமண மண்டபங்கள் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக கூறினார்.