சிலிண்டர் விலை உயர்வு…! விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல! – அன்புமணி ராமதாஸ்

Default Image

சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை  நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. அதன்படி,தற்போது,சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 900 ரூபாயிலிருந்து ரூ.915 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டாவது விலை உயர்வு இதுவாகும். சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல!

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ரூ.710 ஆக இருந்த எரிவாயு விலை இப்போது 205 ரூபாய் அதிகரித்துள்ளது. அத்தியவசியப் பொருளான எரிவாயு விலை 8 மாதங்களில் 29% உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. ஏழை – நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்