ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகிய சுட்டிக் குழந்தை சாம் கரண்..!
ஐபிஎல் 2021 மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக சாம் கரண் விலகியுள்ளார்.
இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான சாம் கரண் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லில் உள்ள மீதியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பையையில் இருந்தும் விலகுவதாக சாம் கரண் அறிவித்துள்ளார். இந்த சீசனில் சாம் கரண் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுகுறித்து சாம் கரண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஐபிஎல் சீசன் மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுகிறேன். இந்த பருவத்தில் சென்னையுடன் என் நேரத்தை மிகவும் நேசித்தேன். சென்னை வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். அடுத்த சில நாட்களில் நான் இருக்கும் இடத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் விளையாடும் கடந்த இரண்டு சீசன்களில் உங்கள் ஆதரவை நான் முற்றிலும் நேசித்தேன் என தெரிவித்தார். 23 வயதான சாம் கரண் இங்கிலாந்துக்காக 24 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
A special message from #KadaikuttySingam to the #Yellove family!
Read More: https://t.co/g0QxFMUkWS#WhistlePodu #Yellove ???????? @CurranSM pic.twitter.com/PwvGQuzigU
— Chennai Super Kings – Mask P????du Whistle P????du! (@ChennaiIPL) October 5, 2021