#Breaking:இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!

Default Image

இயற்பியல் துறைக்கான நடப்பு ஆண்டு நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் விருது,அமெரிக்காவின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.சிக்கலான இயற்பியல் கட்டமைப்பு குறித்த விளக்கத்திற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,சியுகுரோ மனாபே மற்றும் கிளாஸ் ஹாசல்மேன் ஆகியோர்,பூமியின் காலநிலையின் இயற்பியல் மாடலிங், மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பகத்தன்மையுடன் கணிதத்தன் காரணமாகவும்,.

ஜியோர்ஜியோ பாரிசி, “அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை உள்ள அமைப்புகளில் சீர்குலைவு மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்ததற்காகவும்,இவர்கள் 3 பேருக்கும் விருதை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நடுவர் மன்றம் இன்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்