#BREAKING: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு..!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 28 மணி நேரமாக வழக்குப்பதிவு செய்யாமல் அடைத்து வைத்திருப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் நேற்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார்.
அப்போது உத்தரபிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்துள்ளனர். இதையெடுத்து, நேற்று காலை முதல் உத்திரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.