உலகின் அதிவேக மின்சார-கார் சார்ஜர் கண்டுபிடிப்பு…15 நிமிடங்கள் போதும்- ஏபிபி நிறுவனம்..!

Default Image

15 நிமிடங்களில் மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்யும் உலகின் அதிவேக இ-கார் சார்ஜரை ஏபிபி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் தொடங்கி 9 மணி நேரம் வரை  செலவிட வேண்டி இருக்கின்றது.இந்நிலையில்,சுவிஸ் நாட்டை சேர்ந்த ஏபிபி என்ற பொறியியல் நிறுவனம் தனது புதிய டெர்ரா சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் அதிவேக மின்சார வாகன சார்ஜிங் அலகு என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.இந்த புதிய டெர்ரா 360 மாடல் ஒரு மாடுலர் சார்ஜர் ஆகும்,அதாவது,இது ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களுக்கு மாறும் மின் விநியோகத்துடன் சார்ஜிங் வழங்கும் திறன் கொண்டது.

மேலும்,லாரிகள், கப்பல்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட வணிக வாகனங்கள் தவிர மின்சார வாகனங்களுக்கு மின்உள்கட்டமைப்பு, சார்ஜிங் மற்றும் மின்மயமாக்கல் தீர்வுகளை ஏபிபி நிறுவனம் வழங்குகிறது.

மேலும்,இது தொடர்பாக ஏபிபி ஒரு அறிக்கையை வெளியிட்டது.அதில்,புதிய சார்ஜர் அதிகபட்சமாக 360 கிலோவாட் வெளியீடு(output) கொண்டது மற்றும் புதிய சார்ஜர் எந்த மின்சார காரையும் 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது.

உலகின் மிக விரைவான மின்சார வாகன சார்ஜர்,அலுவலக வளாகங்கள் அல்லது மால்கள் போன்ற எந்த வணிக வளாகத்திலும் மற்றும் சிறிய டிப்போக்கள் அல்லது பார்க்கிங் இடங்களிலும் நிறுவப்படலாம்.ஏனெனில், டெர்ரா 360 சார்ஜர்கள் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன.

ஏபிபி புதிய டெர்ரா 360 சார்ஜரானது இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில்  கிடைக்கும்.இது அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் பகுதிகள் போன்ற பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்