போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு…!

Default Image

அசாமில் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் வேலை பெறுவதற்கு சில ஆசிரியர்கள் போலியான  TET தகுதி  சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்களை முறையாக விசாரிக்குமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதன் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள  ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ் சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அசாமில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து முப்பத்தி ஆறு ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும், அதன்பின் போலி சான்றிதழ்களை சமர்பித்து தற்பொழுது ஆசிரியர் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த 36 ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்