#Breaking:பேனர்களை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!
பேனர்களை தடுக்க விதிகள் தேவை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக,விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம், பேனர்களை வைத்தபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளது.
மேலும்,சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய வழக்கு மற்றும் பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.