BIGG BOSS 5 promo 1 : முதல் நாளே அழவச்சிட்டீங்களே பிக் பாஸ் ….! கண்கலங்கிய இசைவாணி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் கடந்து வந்த பாதை குறித்து இசை வாணி கலக்கத்துடன் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நான்கு பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
அதே போல இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாம் நாளான இன்று, கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் முதல் போட்டியாளரான இசைவாணி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து கூறுகையில், தனது தந்தையின் வேலை பறிபோனதையும், அதனால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கண் கலங்கிய நிலையில் கூறுகிறார். இதோ அந்த முதல் ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram