6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கிய வாட்ஸ்அப்,பேஸ்புக் இன்ஸ்டாகிராம்
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம்.
மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை 5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது.
இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.
டவுன்டெடெக்டர்,என்ற தடைகளைக் கண்காணிக்கும் நிறுவனமானது இது பற்றி கூறுகையில் , இது இதுவரை கண்டிராத மிகப்பெரிய தடை என்று கூறுகிறது ,இந்த பாதிப்பானது உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பிரச்சனை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய இழப்பை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.இது நேற்று இரவு 9.30 மணி அளவில் நிகழ்ந்தது.கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த பிரச்சனையை சரிசெய்யப்பட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இதனை சார்ந்திருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் வணிகங்களின் மிகப்பெரிய சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.
எங்கள் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்,இப்பொழுது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி என ட்வீட் செய்துள்ளது அந்நிறுவனம்.
To the huge community of people and businesses around the world who depend on us: we’re sorry. We’ve been working hard to restore access to our apps and services and are happy to report they are coming back online now. Thank you for bearing with us.
— Facebook (@Facebook) October 4, 2021
இன்று வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாத அனைவரும் மன்னிக்கவும்.நாங்கள் மெதுவாக மற்றும் கவனமாக வாட்ஸ்அப்பை மீண்டும் வேலை செய்யத் தொடங்குகிறோம்.
உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி. எங்களிடம் மேலும் தகவல்கள் பகிரப்படும்போது நாங்கள் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்போம் என்று ட்வீட் செய்துள்ளது.
Apologies to everyone who hasn’t been able to use WhatsApp today. We’re starting to slowly and carefully get WhatsApp working again.
Thank you so much for your patience. We will continue to keep you updated when we have more information to share.
— WhatsApp (@WhatsApp) October 4, 2021
மேலும் இது பற்றி தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும் – நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளார் .
இத்தகைய மிகப்பெரிய செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட வருவாய் கிட்டத்தட்ட $ 6 பில்லியனுக்கும் அதிகமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.