வீட்டிலேயே நலங்கு மாவு தயாரிப்பது எப்படி? இதன் பயன்கள்..!

Default Image

வீட்டிலேயே எளிமையாக குளியல் பொடியான நலங்கு மாவு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தினமும் நாம் நமது சருமத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதனை பராமரிக்க வேண்டும். அப்போது நமது சருமம் தெளிவாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். அந்த காலத்து பெண்கள் குளிப்பதற்கு சோப்பு போன்றவற்றை பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக குளியல் பொடியான நலங்கு மாவு என்பதையே பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களது சருமம் பார்ப்பதற்கு தெளிவாக, அழகிய தோற்றத்தை அளித்துள்ளது.

இப்போது பல விதமான ரசாயன பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய சோப்பை நாம் குளியலுக்கு பயன்படுத்தும் பொழுது, சருமம் பாதிப்படைகிறது. சிலருக்கு இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றவும் செய்கிறது. இதிலிருந்து விடுபட்டு, அழகிய சருமத்தை பெறுவதற்கு எளிமையாக வீட்டிலேயே நலங்கு மாவு செய்வது எப்படி என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வசம்பு, ரோஜாமொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டிவேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள், மஞ்சள், ஆவாரம் பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை

செய்முறை

தேவையான பொருட்கள் ஒவ்வொன்றிலும் 50 கிராம் அளவு எடுத்து கொண்டு அவற்றை வெயிலில் நன்கு காயவைத்து பின்னர் அவற்றை மிக்சியில் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இவற்றை காற்று புகாத மூடிய பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

தேவையான அளவு நலங்கு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின்னர் அதனை உடலில் தடவி 5 நிமிடங்கள் காய வையுங்கள். காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றி ஸ்க்ரப் செய்து பொடியை சருமத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

பயன்கள் 

  • நலங்கு மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உலர்த்தாமல் உறிஞ்சுகிறது
  • இது சருமத்தின் இயற்கையான pH சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது
  • மஞ்சள் உடலின் ஆக்ஸிஜனேற்றிகளின் தொகுப்பை ஊக்குவிக்கிறது மற்றும் வயதான தோற்றத்தை குறைக்கிறது
  • மூலிகை குளியல் பொடியின் வழக்கமான பயன்பாடு எண்ணெய் சுரப்பைக் குறைப்பதன் மூலம் முகப்பரு அல்லது பருக்கள் ஏற்படுவதை தடுக்கும்.
  • நலங்கு மாவு பொடியை தினமும் பயன்படுத்துவது உடல் துர்நாற்றம் மற்றும் அதிகப்படியான வியர்வையை குறைக்க உதவும்
  • இது ஒரு டோனர் போல செயல்படுகிறது, சருமத்தில் உள்ள துளைகளை குறைக்கிறது
  • நலங்கு மாவு பொடி பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பாக செயல்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்