அருணாச்சலப் பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ….!
அருணாச்சலப் பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள பசார் எனும் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசார் பகுதியில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், 106 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதியும் நில அதிர்வு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.