பெட்ரோல் போட வேண்டுமென்றால் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – வேலூர் ஆட்சியர்
பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இந்நிலையில், வேலூரில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அங்கு வருபவர்கள் தடுப்பொசி செலுத்தி கொண்டார்களா? என ஆய்வு செய்தார்.
அப்போது சிலர் தடுப்பூசி செலுத்தாததால், பெட்ரோல் நிலையத்திலேயே முகாம் அமைக்கப்பட்டு, அங்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.