தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்திய பிக்பாஸ் சினேகன்..!
தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிக்பாஸ் சினேகன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த, பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் தான் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். சினேகன் 600 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.
மேலும், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணந்தார். தற்போது தனது மனைவியின் பெயரை சினேகன் தன் கையில் பச்சைகுத்தியுள்ளார். அதேபோல் கன்னிகாவும் சினேகன் பெயரை கையில் பச்சைகுத்தியுள்ளார்.