மும்பையை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி..!

Default Image

டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோகித் 7 எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் சூரியகுமார் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் 19 ரன்னில் வெளியேறினார்.  அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை திவாரி 15, கீரான் பொல்லார்ட் 6, ஹர்திக் பாண்டியா 17 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் அவேஷ் கான், அக்ஸர் படேல் தலா மூன்று விக்கெட்டையும், அன்ரிச் நார்ட்ஜே , அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர். 130 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.

பந்து வீச்சில் டெல்லி சிறப்பாக செயல்பட்டது போல பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரித்வி ஷா 6, ஷிகர் தவான் 8 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறங்கிய கேப்டன் பண்ட் நிதானமாக விளையாடி 26 ரன்னில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்தார். இருந்தபோதிலும் அடுத்தடுத்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்த இருந்த நிலையில், அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது.

காரணம் ஸ்டீவன் ஸ்மித் 9,  அக்ஸர்படேல் 9 , ஷிம்ரான் ஹெட்மியர் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில்  ஸ்ரேயாஸ் ஐயர் 33*, அஸ்வின்  20* ரன்கள் எடுத்து நின்றனர். புள்ளி பட்டியலில் டெல்லி 18 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi