திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல்.
சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா, திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அருமைச் சகோதரர் வீரபாண்டி இராஜா அவர்கள். இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர். அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல! இரங்கல் தெரிவித்துள்ளார்.