தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று…!
தேசத்தந்தை மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1869 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் காந்தியடிகள். இவரது தாய் மொழி குஜராத்தி. தனது 13-வது வயதிலேயே கஸ்தூரிபாய் எனும் 13 வயது பெண்மணியை மணந்த காந்தியடிகளுக்கு, நான்கு ஆண் குழந்தைகள். தனது 16 வது வயதில் தந்தையை இழந்த காந்தியடிகள், தனது 18-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்து பாரிஸ்டர் எனும் வழக்குரைஞர் படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார்.
அதன்பின் தனது படிப்பை முடித்து வழக்குரைஞராக தாயகம் திரும்பிய காந்தியடிகள், ராஜ்கோட்டில் உள்ள நீதிமன்றத்தில் எளிய பணி ஒன்றை செய்து வந்துள்ளார். அங்கு ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஏற்பட்ட சிறிய பிரச்சனையால் இவரது வேலை பறிபோய் உள்ளது. அதன்பின் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற ஒரு வேலை தேடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடு அதிகரித்து இருந்துள்ளது. மேலும் அவர் வெள்ளையர் அல்ல எனும் ஒரே காரணத்திற்காக பலராலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள கருப்பின மக்கள் பல இன்னல்கள் படுவதை உணர்ந்த காந்தியடிகள், அதற்காக அறவழி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டத்தின் மூலம் வெற்றியும் கண்டுள்ளார்.
அதன்பின் 1885 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்து செல்வதற்காக இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளார். பின் 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு விதித்த உப்பு வரியை மறுத்த காந்தியடிகள் தன்னுடைய நாட்டில் விளைந்த பொருட்களுக்கு அன்னியர் வரி விதிப்பதா? என்று கருதி சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.
ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கிய காந்தி, மேற்கொண்ட இடைவிடாத போராட்டம் காரணமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன்பின் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி புதுடெல்லியில் வைத்து காந்தியடிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சத்தியம் மற்றும் அகிம்சை ஆகிய இரண்டு கொள்கைகளை கடைப் பிடித்த காந்தியடிகள் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. குஜராத் மொழியில் அவர் எழுதிய காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைய பெரும்பாடு பட்ட தேசத்தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.