வங்காளதேசம்: பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி..!
வங்காளதேசத்தில் பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்மா நதியில் நேற்று பிற்பகலில் சுமார் 50 பயணிகளுடன் பயணித்த படகு மூழ்கியுள்ளது. இதில் மூன்று சிறு குழந்தைகள் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகில் பயணிகள் தவிர, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சரக்கு, தேங்காய் மற்றும் சைக்கிள்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிக சுமை காரணமாக விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த படகு விபத்தில் 20 பேர் ஏற்கனவே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள பயணிகளை தேடும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.