ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று ஜப்பானில் உள்ள இஷினோமாகி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 54 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் கடலோரப்பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.