கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி…

Default Image

கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி.

முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது  கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.

ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து,ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திரகுமாரிக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்திரகுமாரி தற்போது,திமுக இலக்கிய அணி செயலாளராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்