மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.., பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
2018 ஆம் ஆண்டு மாணவியை பாலியல் துன்புறுத்திய வழக்கில் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர் சின்ச்வாட்டைச் சேர்ந்த நிவ்ருத்தி தேவ்ரம் கல்போர் (53) என தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆண்டு அக்டோபர் 12- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அக்டோபர் 22, 2018 அன்று போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் எந்த சிறை தண்டனையும் அனுபவிக்கவில்லை. இந்த வழக்கு சமீபத்தில் புனே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 8 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக சிஆர்பிசி பிரிவு 235 -ன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படுகிறார். இதன் மூலம் மூன்று வருடங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி எஸ்.ஆர்.நவண்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆசிரியருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)