இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பாறையில் மலையேற சென்ற 14 பேர் சிக்கி தவிப்பு; 2 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக சென்றிருந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 பேர் சிக்கியுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹாஸ் ஸ்பிட்டி எனும் பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக ஒரு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளது.5000 மீட்டருக்கு மேல் அந்த குழுவினர் மலையில் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக அவர்கள் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து மலை பகுதியில் சிக்கித் தவிக்க கூடிய 14 பேரையும் மீட்பதற்காக மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள லஹாஸ் ஸ்பிட்டியின் துணை ஆணையர் நீரஜ் குமார் அவர்கள், மலைப் பகுதியில் சிக்கித் தவித்த கூடிய 14 பேரும் விரைவில் காசாவை அடைய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று மீட்பு குழு தார் சாங்கோ பகுதியில் தங்கியிருப்பார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் கீலாங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal