உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா…? – சீமான்
உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என்று தெரியவில்லை.
தேர்தல் தேதி அறிவித்த பின் சத்தத்தை காணவில்லை. பதவிகளை ஏலம் விட கூடாது என்று அறிவித்தார்கள். ஆனால், ஊர், ஊராக ஏலம் தான் விடப்படுகிறது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.