தவறு ஆடையில் இல்லை…பார்க்கும் கண்களில் தான் உள்ளது.!- டிடி.!
அந்தமானுக்கு சுற்றுலா சென்ற தொகுப்பாளினி டிடி இரண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு டிடி அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி அங்கு கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அங்கு சென்று எடுக்கப்பட்ட இரண்டு கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் அந்தமான் ஆண்களுக்கு நடுவே தான் பாதுகாப்பானதாக உணர்ந்ததாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” தவறு ஆடையில் இல்லை..அதைப் பார்க்கும் கண்களில்தான் உள்ளது. அந்தமானில் ஒரு ஆண்கள் கூட என்னைப் பாதுகாப்பற்றோ அல்லது அசௌகரியமாகவோ உணரவைக்கவில்லை… நான் கடற்கரைக்கு ஏற்றது மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தேன். அதனால் தவறு நிச்சயம் ஆடையில் இல்லை அதைப் பார்க்கும் கண்களில்தான் உள்ளது.
இன்று உலக சுற்றுலா தினம். இந்த நாளில் எனது ஆசையெல்லாம் ஒன்றுதான் பயணம் செய்யும் ஒவ்வொரு சிறுமிகளும், பெண்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணரவேண்டும்”. என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram