குட்கா-பான் மசாலாவிற்கு மேலும் ஒரு வருடத்திற்கு தடை நீட்டிப்பு..!
ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை ஒரு வருடத்திற்கு நீட்டித்தது.
குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு ஹரியானா அரசு நேற்று நீட்டித்தது. இதுதொடர்பாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக்கூடாது என்பதற்காக ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு ஒரு வருடம் தடை விதித்தது. அதாவது கடந்த செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மாநில அரசு நேற்று முடிவு செய்தது. இதனால், ஹரியானாவில் அடுத்தாண்டு செப்டம்பர் வரை குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.