உத்தர பிரதேசம் மீரட் நகரில் டெங்கு பாதிப்பு 156 ஆக உயர்வு…!
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 156 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவடையாத நிலையில், வட மாநிலங்கள் பலவற்றில் தற்போது டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் அவர்கள் இதுவரை 70 நோயாளிகள் மருத்துவமனையிலும், 86 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.