மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமம் பெறுவதற்கு அருமையான 5 டிப்ஸ்..!

Default Image

உங்களது சருமம் மென்மையாக அழகாக இருப்பதற்கு இந்த 5 வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமத்தை அடைவது என்பது நீண்ட கால கனவாக இருக்கும். சருமத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு பல்வேறு பரிந்துரைகள் இருந்தாலும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று பல உள்ளது.

ஆரோக்கியமான மகிழ்ச்சியான தோல் என்பது ஒரு முழுமையான செயல்முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல தோல் பராமரிப்புடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க வழி செய்யும். நமது சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிமையான 5 முறைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுத்தம் மற்றும் ஈரப்பதம்

ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு முதல் மற்றும் எளிமையான படி சருமத்தை வழக்கமான முறையில் சுத்தப்படுத்துதல் மற்றும் ஈரப்பதமாக்குதல். உங்கள் சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதையும், மிருதுவாகவும், ஊட்டச்சத்துடனும் இருப்பதை உறுதி செய்யும் ஈரப்பதமூட்டும் உடல் சோப்பைப் பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை அளிக்கும்.

சீரான உணவு

ஆரோக்கியமான தோல் என்பது சீரான உணவின் விளைவாகும். நாம் உண்ணும் உணவு நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கான முக்கிய தேவையை வழங்குகிறது. நாம் உண்ணும் உணவு நமது சருமத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது ஆகும். உணவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள், கொலாஜன் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான உயிரணு சவ்வுகளை ஊக்குவிக்கிறது. மேலும் இது புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.

புன்னகை

புன்னகை நமது சருமத்திற்கு புத்துணர்வை அளிக்கும். ஒரு எளிமையான புன்னைகையில் கிடைக்கக்கூடிய நன்மைகளை நாம் அரிதாகவே உணர்கிறோம். நாம் சிரிக்கும்போது இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். அதிலும் சருமம் அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை நாம் சிரிக்கும் பொழுது பெறுகிறது. இதனால் சருமத்தில் நிறம் மாற உறுதுணையாக இருக்கும். உங்களை மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க இது உதவியாக இருக்கும்.

போதுமான அளவு நீர் குடிக்கவும்

நமது உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க எளிதான வழியாகும். மேலும், நீர் வாழ்வின் அமுதம் என்று அழைக்கப்படுவதில் சிறிதும் ஆச்சரியமில்லை. அந்த அளவு நன்மை நாம் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும். போதுமான தண்ணீர் குடிப்பது நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது பருக்கள் மற்றும் முகப்பருவைத் தடுக்கும் மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கும்.

உடல் இயக்கம்

சுத்தம் மற்றும் சரியான ஊட்டச்சத்துடன், மகிழ்ச்சியான சருமத்திற்கு முக்கியமான மற்றொரு அம்சம் உடலின் இயக்கமாகும். நாம் கலோரிகளை எரிக்கும்போது, ​​உடல் எண்டோர்பின்ஸ் எனப்படும் இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த எண்டோர்பின்கள் மூளையில் உள்ள ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு நேர்மறை உணர்வுகளையும் மகிழ்ச்சியான எண்ணங்களையும் தூண்டுகின்றன. இந்த மகிழ்ச்சியின் மூலம் கிடைக்கும் உணர்வு தோலில் பிரதிபலிக்கிறது. இதனால் உங்கள் மனநிலையை முற்றிலும் மாற்றி, உங்களையும் உங்கள் சருமத்தையும் மிளிர செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்