#CSK vs KKR:சிஎஸ்கே வீரர் டு பிளசிஸ் காலில் ரத்தம்….என்ன நடந்தது?

Default Image

சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இன்று அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.இதில்,டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் பேட்டிங்கில் சற்று தடுமாறினார்.

ஏனெனில்,சென்னை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே அதற்கு காரணம்.இதனால்,9 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மான் கில்,அணியின் கேப்டன் இயோன் 14 பந்துக்கு 8 ரன்கள் மற்றும் நிதிஷ் ராணா,ஆண்ட்ரே ரசல்,தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால்,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இதற்கிடையில்,இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸ் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்தார்.முதலில் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலேயே  கேட்ச் கொடுத்தார். அதை பிடிக்க வேகமாக ஓடி வந்த டு பிளசிஸ்,கேட்ச் வேகமாக தாவி விழுந்து பந்தை மிஸ் செய்தார்.இதில் அவரின் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.மேலும்,விரலிலும் காயம் ஏற்பட்டது.

எனினும், டு பிளசிஸ் தொடர்ந்து விளையாடினார்.இதனையடுத்து,அதோடு அவர் ஹசல்வுட் ஓவரில் இயான் மோர்கன் அடித்த பந்தை சிக்ஸர் லைனல் அருகே சிறப்பாக கேட்சும் பிடித்தார். காலில் காயம் ஏற்பட்ட பின்பும் அவர் ரத்தம் வந்ததை பற்றியும் கவலைப்படாமல் இந்த கடினமான கேட்சை பிடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக, மும்பைக்கு எதிரான ஐபிஎல் பைனலில் வாட்சன் இதேபோல்தான் காலில் ரத்தம் வர ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்