சிவில் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!

சிவில் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
கோவையை சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார். இவரது தாய் அமிர்தவள்ளி வாய் பேசாத இயலாத, செவி திறனற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஆவினில் பணியாற்றி வருகிறார். ஒரே அண்ணன் மருத்துவராக உள்ளார். ரஞ்சித் குமார் அவர்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற குழந்தையாக தான் பிறந்துள்ளார்.
பிறந்த ஆறு மாதத்தில் குறையை கண்டறிந்த பெற்றோர் தனது மகனை இந்த சமூகத்தில் போட்டி போட்டு வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதற்காகவே, கேட்கும் திறன் அற்ற, பேசும் திறன் அற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படிப்பை கற்று பிஎட் பட்டம் பெற்ற அது சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். இதன் மூலம் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆசிரியரான அவரது தாயின் எண்ணம் வெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
காது கேளாதோர் பேச முடியாத பள்ளியில் தான் வேலை செய்த பள்ளியிலேயே தனது மகனை படிக்க வைத்த அவர் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றார். அதன் பின் பொறியியல் படிப்பையும் நிறைவு செய்தார். இதனையடுத்து, சிவில் தேர்வுக்காக சந்தோஷ்-சபரி பயிற்சி மையத்தில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவருக்கு, சபரிநாதன் என்ற ஆசிரியர் பயிற்சியளித்தார்.
அதில் கடின முயற்சி செய்து இரண்டாவது முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவனான ரஞ்சித்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில், இந்திய அளவில் 750-வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ள கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் ரஞ்சித் அவர்களை நேரில் சந்தித்து மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்து வாழ்த்தினேன். (1/2) pic.twitter.com/SmxqLxQrzT
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025