கூட்டுறவு நகைக்கடன் : முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு…!
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் மட்டுமன்றி, 100% பொது நகைக்கடன்களையும், இந்த குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சார் பதிவாளர், சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில், இந்த குழு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் இது தொடர்பாக ஆய்வ செய்து நவ.21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.