#Recruitment 2021: 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

Default Image

நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத் தேர்வுக்கான விண்ணப்பங்களை கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு (Phase IX 2021) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், அக்டோபர் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பல்வேறு மத்திய காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Staff Selection Commission-இன்  ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

தகுதி வரம்பு:

மத்திய பணியாளர் தேர்வாணையம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விரிவான அறிவிப்பில் முழுமையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை சரிபார்க்கலாம். ஒரு வகை பதவிக்கு விண்ணப்பதாரர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான தகவலை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்.

தேர்வு முறை:

மெட்ரிகுலேசன், உயர்நிலை மற்றும் பட்டப்படிப்பு என குறைந்தபட்ச கல்வித் தகுதி உள்ள பணியிடங்களுக்கு, குறிக்கோள் வகை மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடங்கிய எழுத்து, மூன்று தனித்தனி கணினி அடிப்படையிலான தேர்வுகள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை BHIM UPI, Net Banking, Visa, Mastercard, Maestro, RuPay Credit அல்லது Debit கார்டுகளைப் பயன்படுத்தி அல்லது SBI சலானை உருவாக்குவதன் மூலம் SBI கிளைகளில் ஆன்லைனில் செலுத்தலாம்.

இடஒதுக்கீட்டிற்கு தகுதியுள்ள சாதி பட்டியலில் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), மாற்றுத்திறனாளிகள் (PwD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகிய பெண்கள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்