தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் “குலாப் புயல்” உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025