அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு…!
அருணாச்சல பிரதேசத்தில் இன்று திடீரென 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 10.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் பான்கின் என்னும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 19 அன்று, அருணாசலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டம் அருகே ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.