எடப்பாடி பழனிசாமி கனவு கோட்டையில் உள்ளார் – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

Default Image

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்றது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் குறித்து நேற்று ஆலோசனையில் நடத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என கூறினார். ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம், இதனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்

இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படை இல்லாமலும் பேசுகிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியிருந்த குற்றசாட்டு எப்படி அடிப்படை உண்மையில்லை என்பதை போன்று, இதுவும் அடிப்படை ஒரு ஆதாரமற்றது தான். ஒருவேளை அவர், எம்பி தேர்தல் தான் வருகிறது என்பதை சொல்லியிருக்கிறாரா என்பது தெரியவில்லை என கூறினார்.

பொதுவாக எல்லாவற்றையும், அடிப்படை இல்லாமல் ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டு கூறுவது எடப்பாடி பழனிசாமிக்கு பழக்கமானதால் அவர் அப்படிப்பட்ட கனவு கோட்டையில் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்