இனிமேல் “யானைகளை” தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் தனி நபர்கள் யானைகள் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அக்டோபர் வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.