நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி.! மிரட்டலான வலிமை Glimpse வெளியீடு.!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியீடபட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது. அதன் பின் நேற்று படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வலிமை படத்தின் Glimpse வெளியிடபட்டுள்ளது. மிரட்டலான வசனத்துடன் யுவனின் தீம் மியூஸிக்குடன் வெளியான வலிமை படத்தின் Glimpse தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Get ready for the #ValimaiPongal! ????
Here’s presenting the #ValimaiGlimpse featuring #AjithKumar! ????
➡️ https://t.co/FDVhHAz4yF@BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @SonyMusicSouth #Valimai
— Boney Kapoor (@BoneyKapoor) September 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025