வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம்…!
வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம்.
தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக தெலுங்கானாவில் பெய்த கனமழையின் போது அவரது வீடு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இவர் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் தஞ்சமடைந்தார். சமுதாய கூடத்தில் இருந்து சில நாட்களில் வெளியேறுமாறு கூறிய நிலையில், வசிப்பதற்கு இடம் இன்றி தவித்து வந்த சுஜாதா சுஜாதா அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது நிலை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தூங்குவோம் .இரண்டு குழந்தைகளும் கழிப்பறைக்கு உள்ளே தூங்குவார்கள். மழை பெய்யும் காலங்களில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு நாங்கள் தூங்கவே மாட்டோம். எங்கள் நிலைமை யாருக்கு புரியும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து சுஜாதாவின் நிலையை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகம் அவருக்கு அவர் வசித்துவந்த கழிப்பறைக்கு அருகில் வீடு கட்டி கொடுப்பதற்கு முன் வந்துள்ளது.