கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – இருவரிடம் 2வது நாளாக விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை அதிகாரிகளின் விசாரணை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9வது நபர்களாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திர சேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 29 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டப்பட்டோரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.