கடந்த 6 மாதத்தில் முகநூல் பக்கத்தில் 300 கோடி போலி கணக்குகள் முடக்கம் – பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் நிறுவனம் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கரங்களிலும், மொபைல் போனை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளம் தான். பேஸ்புக், வாட்சப், இண்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் ஒரு கணக்கை வைத்துள்ளனர்.
அந்த வகையில், சமூகவலைத்தள பக்கங்களில் பல போலி கணக்குகளும் உருவாகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வழி உருவாகிறது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் 1,300 கோடி டாலர் செலவளித்திருப்பதாகவும், பயனாளர்களின் பாதுகாப்பிற்காக மட்டும் தங்களது நிறுவனத்தில் 40,000 பேர் பணியாற்றி வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.