தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் ஆருயிர்ச் சகோதரர் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர்!

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்களும் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும், நாடாளுமன்றத்தை தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாக வலம் வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும் – நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் – கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) September 22, 2021