பஞ்சாப் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்…!
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றார்.
இவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘மாண்புமிகு முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியைக் கைப்பற்ற, முதல்வராகத் தொடர எமது வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.
#பஞ்சாப் : மாண்புமிகு முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி @CMOPb அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியைக் கைப்பற்ற, முதல்வராகத் தொடர எமது வாழ்த்துகள். pic.twitter.com/A5vBVNKEHY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 22, 2021