கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதனால்,நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை கோரியது.
இந்நிலையில்,கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது தெரிய வந்துள்ளது.இதனால்,விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் , 5 சவரனுக்கு அதிகமான நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.